27 நட்சத்திரங்கள்
கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசி.
1. ராசிகள் மொத்தம் 12 உள்ளன.
2. நட்சத்திரங்கள் 27 உள்ளன.
3. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
27 நட்சத்திரங்கள்பெயர்கள் :
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியேயான குணங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை. இந்த நட்சத்திரமானது, தன் குணங்களுடன் ராசியின் குணத்தையும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற பலன்களையும், செயல்களையும் ஒருவரிடம் வெளிப்படுத்துகின்றன.
27 நட்சத்திரங்கள்பின்வருமாறு:
1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி போன்றவை ஆகும்.
நட்சத்திரஇராசிமண்டலம்:
ஒரு இராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரி) கொண்டது. ராசி மண்டலத்தில் 30 டிகிரியை கொண்டது ஒரு ராசி ஆகும். மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் சமமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் :
ஒரு ராசியின் பாகைகள் (டிகிரி) = 30 பாகைகள்
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள இராசிகளும் அவற்றின் டிகிரிகள் மற்றும் இராசி ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள்.
1. மேஷ ராசி : 0 to 30 டிகிரி : மேஷ ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
அஸ்வினி : 1,2,3,4 பாதங்கள்
பரணி : 1,2,3,4 பாதங்கள்
கிருத்திகை : 1 பாதம்
2. ரிஷப ராசி : 30 to 60 டிகிரி : ரிஷப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
கிருத்திகை : 2,3,4 பாதங்கள்
ரோகிணி : 1,2,3,4 பாதங்கள்
மிருகசீரிடம் : 1,2 பாதங்கள்
3. மிதுனராசி : 60 to 90 டிகிரி : மிதுன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மிருகசீரிடம் : 3,4 பாதங்கள்
திருவாதிரை : 1,2,3,4 பாதங்கள்
புனர்பூசம் : 1,2,3 பாதங்கள்
4. கடகராசி : 90 to 120 டிகிரி : கடக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
புனர்பூசம் : 4 பாதம்
Xem thêm : Gold Rate in Kanpur – 21st November 2024
பூசம் : 1,2,3,4 பாதங்கள்
ஆயில்யம் : 1,2,3,4 பாதங்கள்
5. சிம்மராசி : 120 to 150 டிகிரி : சிம்ம ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மகம் : 1,2,3,4 பாதங்கள்
பூரம் : 1,2,3,4 பாதங்கள்
உத்திரம் : 1 பாதம்
6. கன்னிராசி : 150 to 180 டிகிரி : கன்னி ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
உத்திரம் : 2,3,4 பாதங்கள்
அஸ்தம் : 1,2,3,4 பாதங்கள்
சித்திரை : 1,2 பாதங்கள்
7. துலாம்ராசி : 180 to 210 டிகிரி : துலாம் ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
சித்திரை : 3,4 பாதங்கள்
சுவாதி : 1,2,3,4 பாதங்கள்
விசாகம் : 1,2,3 பாதங்கள்
8. விருச்சகராசி : 210 to 240 டிகிரி : விருச்சிக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
விசாகம் : 4 பாதம்
அனுஷம் : 1,2,3,4 பாதங்கள்
கேட்டை : 1,2,3,4 பாதங்கள்
9. தனுசுராசி : 240 to 270 டிகிரி : தனுசு ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மூலம் : 1,2,3,4 பாதங்கள்
பூராடம் : 1,2,3,4 பாதங்கள்
உத்திராடம் : 1 பாதம்
10. மகரராசி : 270 to 300 டிகிரி : மகர ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
உத்திராடம் : 2,3,4 பாதங்கள்
திருவோணம் : 1,2,3,4 பாதங்கள்
அவிட்டம் : 1,2 பாதங்கள்
11. கும்பராசி : 300 to 330 டிகிரி : கும்ப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
அவிட்டம் : 3,4 பாதங்கள்
சதயம் : 1,2,3,4 பாதங்கள்
பூரட்டாதி : 1,2,3 பாதங்கள்
12. மீனராசி : 330 to 360 டிகிரி : மீன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
பூரட்டாதி : 4 பாதம்
உத்திரட்டாதி : 1,2,3,4 பாதங்கள்
ரேவதி : 1,2,3,4 பாதங்கள்
ஒவ்வொரு ராசிக்கும் அதனை இயக்கம் கிரகங்கள் ராசி அதிபதி ஆவார்கள்:
மேஷம், விருச்சிகம் – செவ்வாய்
மிதுனம், கன்னி – புதன்
தனுசு, மீனம் – குரு
ரிஷபம், துலாம் – சுக்கிரன்
மகரம், கும்பம் – சனி
சிம்மம் – சூரியன்
கடகம் – சந்திரன்
அஸ்வினி, மகம், மூலம் – கேது
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன்
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் – சந்திரன்
மிருகசீரிடம், சித்திர, அவிட்டம் – செவ்வாய்
திருவாதிரை, சுவாதி , சதயம் – ராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு
பரணி, பூரம் , பூராடம் – சுக்கிரன்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன்
27 நட்சத்திரங்களையும் மூன்று வகையான கணங்களாக பிரித்திருக்கிறது ஜோதிடம்.
1. தேவ கணம்
2. மனுஷகணம்
Xem thêm : किडनी की बीमारी के 10 संकेत
3. ராட்சஸ கணம்
தேவகணநட்சத்திரங்கள் :
1) அஸ்வினி
2) மிருகசீரிடம்
3) புனர்பூசம்
4) பூசம்
5) அஸ்தம்
6)சுவாதி
7) அனுஷம்
8) திருவோணம்
9) ரேவதி
மனுஷகணநட்சத்திரங்கள் :
1) பரணி
2) ரோகிணி
3) திருவாதிரை
4) பூரம்
5) உத்திரம்
6) பூராடம்
7) உத்திராடம்
8) பூரட்டாதி
9) உத்திரட்டாதி.
ராட்சஸகணநட்சத்திரங்கள் :
1) கிருத்திகை
2) ஆயில்யம்
3) மகம்
4) சித்திரை
5) விசாகம்
6) கேட்டை
7) மூலம்
8) அவிட்டம்
9) சதயம்.
ராசிகளின் வகைகள்
1. சரம் – ஸ்திரம் – உபயம் ராசிகள், என 3 வகைகள்.
2. ஆண் ராசி, பெண் ராசி என 2 வகைகள்.
3. நெருப்பு, நிலம் ,காற்று, நீர் என 4 வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
சர, ஸ்திர, உபய ராசிகள்:
சர ராசிகள்:
மேஷம், கடகம், துலாம், மகரம்.
சரம் என்கிற வடசொல்லிற்க்கு பொருள் இயங்கிக் கொண்டே இருப்பது – அதாவது, ஒரு நிலையில் நிற்காத தன்மை கொண்டிருப்பது. மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை இயங்கிக் கொண்டே இருக்கும் ராசிகளாகும். நகரும் தன்மையை கொண்டிருப்பதால் இடப்பெயர்ச்சியை தந்து கொண்டே இருக்கும்.
எண்ணம் சீராக இருந்தாலும் செயல்படுத்த முடியாத தன்மை இந்த இராசிக்காரர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும்.
4-ம் வீட்டு உரிமையாளர் அல்லது 4-ல் நின்ற கோள், சர ராசியாக இருந்தால் 60 வயது வரை வாடகை வீட்டிலேயே குடியிருக்கும் நிலை இருக்கும். அத்துடன் அடிக்கடி வீடு மாறிக் கொண்டே இருப்பார்கள்.
ஸ்திர ராசிகள்:
ரிஷபம் , சிம்மம், விருச்சிகம், கும்பம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள்.
வாழ்நாள் முழுவதும் தமதான வீட்டிலேயே இருப்பவர்கள், சொத்துக்கள் குவிந்து கொண்டே இருப்பது, சொத்துக்கள் மூலம் நிலையான வருமானம் கிடைப்பது, பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், இவர்களின் செயல்பாடுகள் சிந்தித்து, பொருமையாக, தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.
உபய ராசிகள்:
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். உபயம் என்றால் ஒரே நிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். ஒரே நிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது என்பது இரு தன்மைகளையும் குறிக்கும்.
உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள் இவர்கள்.
அதனால் சொத்து வாங்குவதும், விற்பதும் இவர்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருந்து உரிமையான வீட்டிற்கு சென்றால், அங்கு ஒரு நிலையில் இல்லாது. உரிமையான வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கும் பெயர்வார்கள்.
ஆண் மற்றும் பெண் ராசி:
ஆண் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்.
பெண் ராசிகள்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்
நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசி:
நெருப்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு.
நில ராசிகள்:
ரிஷபம் ,கன்னி ,மகரம்.
காற்று ராசிகள்:
மிதுனம், துலாம், கும்பம்.
நீர் ராசிகள்:
கடகம், விருச்சிகம், மீனம்.
Nguồn: https://craftbg.eu
Danh mục: शिक्षा