பொதுவாகவே இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது.
ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை எச்சரிப்பதாக கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
Bạn đang xem: ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால்… இந்த விடயங்கள் நிச்சயம் நடக்கும்
அந்த வகையில் கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.
கனவு அறிவியல் மற்றும் கனவு சாஸ்திரம் ஆகியவற்றின் பிரகாரம் ஒவ்வொரு விதமான கனவுக்கும் குறிப்பிட்ட அர்த்தம் இருப்பதாக நம்பப்படுகின்றது.
இதன்படி, ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வருவது எதனை உணர்த்துகின்றது என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கனவு சாஸ்திர பலன்கள்
Xem thêm : सपने में दूध के उबलने से लेकर दान तक का दिखाई देना इस ओर करता है इशारा, जानें ज्योतिष की राय
சாதாரணமாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு முக்கியமான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிலும் ஆடி மாதத்தில் முன்னோர்கள் நம்முடைய கனவில் வந்தால் அதற்கு ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
உங்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயங்கள் பற்றி சொல்வதற்காகவோ, வரப்போகும் ஆபத்துக்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதற்காகவோ அல்லது தங்களின் நிறைவேறாத ஆசைகளை உங்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளவோ முன்னோர்கள் முயற்ச்சி செய்வதாக அர்த்தம்.
கனவில் நடந்த விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்காது. மாறாக அதற்கான பலன்களே கிடைக்கும். உதாரணமாக மலத்தை கனவில் கண்டால் பண வரவு கிடைக்கும்.
மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுப நிகழ்வுகளில் உங்களுடைய பணத்தை செலவிட வேண்டி ஏற்படும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
இந்த வகையில் முன்னோர்கள் கனவில் வந்தாலோ இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டாலோ அதிகாரம் ,பதவி உயர்வு வியாபாரத்தில் அதிக லாபம் போன்ற பலன்கள் கிடைக்கும்.
முன்னோர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் செல்வ செழிப்பும் அதிகரிக்க போகின்றது என அர்த்தம். இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரபோகின்றது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்தம்.
நாம் இறந்து போனது போல் நாமே கனவில் கண்டால், உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கின்றது என்று அர்த்தம். ஆடி மாதத்தில் இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் எனவும் அவர்களின் முழுமையான ஆசீ்ர்வாதம் கிடைத்துள்ளது எனவும் அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Nguồn: https://craftbg.eu
Danh mục: स्वप्न डिकोडिंग